Showing posts with label நறுவீ..! காதல் கவிதை..! பூக்கள் கவிதை ... Show all posts
Showing posts with label நறுவீ..! காதல் கவிதை..! பூக்கள் கவிதை ... Show all posts

Monday, 23 August 2021

நறுவீ

நறுவீ..!.

சிறுஇதழ் புன்னகையால்
சிறையில் வாடுகிறேன்..!
சின்ன முத்தால் மீட்க
சீக்கிரம் வந்துவிடு...!

உருவம் இல்லாமலே 
ஊடுருவ செய்கிறாய்...!
ஊதா நிறத்தாலே 
உயிரை கரைக்கிறாய்...!

என்னை அறியாமலே
ஏங்க வைக்கிறாய்...!
ஏழு ராகங்களை
என்மேல் வாசிக்கிறாய்...!

நீண்ட கூந்தலில்
நீந்தாம தவிக்கிறேன்...!
நித்தம் ஒரு முறை
நெஞ்சோரம் சாய்ந்துவிடு...!

--கடலூர் ராஜ்குமார்

அரிதாரம்

 போலியான புன்னகையும் இல்லை வலிக்காத  அழுகையும் இல்லை செலவு செய்யாத கோபமும் இல்லை தீண்ட தெரியாத  தாபமும் இல்லை தீர்வு தராத சோகமும் இல்லை தேவை...