Showing posts with label கடைசி நெற்றி முத்தம். Show all posts
Showing posts with label கடைசி நெற்றி முத்தம். Show all posts

Wednesday, 15 December 2021

பெருங்கனவுகள்

பனிதுளியின் உறக்கத்தை
கலைக்க மாலைநேர நிலவு
நெடுஞ் சாலையில் நடந்து வருகிறது 
நீண்ட நாட்களுக்கு பிறகு

குளிரை பிரிந்த இரவும் 
கூட்டை பிரிந்த பறவையும் 
ஒரே நேர்கோட்டில் சந்திக்கிறது
பார்வையால் மௌனங்களை 
மட்டுமே பரிமாறிக் கொள்கிறது

முதல் மழையில் நனைந்த பூக்கள்
தனது காதல் தேனீயிடம்
நலம் விசாரிக்க முடியாமல் 
போகாத ஊருக்கு போக 
வழி கேட்டு நிற்கிறது

வேற்றுகிரகத்தில் குடியேறிய
மஞ்சள் இளம் வெயிலுக்கு
ஒரு குவளைத் தேனீரை நிழலுடன் 
அருகே அமர்ந்து பருக ஆசை

என் பிரபஞ்சத்தின் இன்னும் சில 
ஆசைகள் பெருங்கனவுகளாகவே
இருக்கிறது கடைசியாக கேட்க
நிறைவேறாத நெற்றிமுத்தங்கள்போல

கடலூர் ராஜ்குமார்


அரிதாரம்

 போலியான புன்னகையும் இல்லை வலிக்காத  அழுகையும் இல்லை செலவு செய்யாத கோபமும் இல்லை தீண்ட தெரியாத  தாபமும் இல்லை தீர்வு தராத சோகமும் இல்லை தேவை...