Wednesday, 25 August 2021

நிழல் காதல்

நிழல் காதல்

நீள் சாய்விருக்கையில் - அவளின்
நீண்ட காத்திருப்பு நீள்கிறது
நிழல் காதலனின் வருகைக்கு 

இருக்கை ஒன்று தான் - இங்கே
இடமாறிவிட்டது இரு இதயங்கள்
இரண்டாம் உலகப்போரின் யுத்தத்தை விட
இவளின் இதயதுடிப்பு சத்தங்கள் அதிகம்

வாரநாட்களில் அவளை பார்ப்பது - வரமே
வாசம் வீசிப்போன வசந்தகாலம் அது
வானவில் பச்சை நிற சுடிதார் - அவளுடன்
வாழ்ந்து விட்டு போக சொல்கிறது

அளவு சற்றே மாறிய  ஆடை - ஓன்று
அது போதும் என்னை அழகாக மாற்ற
அழைத்த திரையில் தீர்ந்து மணித்துளிகள்
அடுத்து எப்போ தூங்காத இமைகளை காண

வரிகள் :கடலூர் ராஜ்குமார்

Monday, 23 August 2021

நறுவீ

நறுவீ..!.

சிறுஇதழ் புன்னகையால்
சிறையில் வாடுகிறேன்..!
சின்ன முத்தால் மீட்க
சீக்கிரம் வந்துவிடு...!

உருவம் இல்லாமலே 
ஊடுருவ செய்கிறாய்...!
ஊதா நிறத்தாலே 
உயிரை கரைக்கிறாய்...!

என்னை அறியாமலே
ஏங்க வைக்கிறாய்...!
ஏழு ராகங்களை
என்மேல் வாசிக்கிறாய்...!

நீண்ட கூந்தலில்
நீந்தாம தவிக்கிறேன்...!
நித்தம் ஒரு முறை
நெஞ்சோரம் சாய்ந்துவிடு...!

--கடலூர் ராஜ்குமார்

Sunday, 22 August 2021

எனக்கும் சிறகுகள் முளைக்குதே

எனக்கும் சிறகுகள் முளைக்குதே
-------------------------------------------------
உன் நினைவை
சுமக்கும் ஆகாயத்தை
கடக்கும் போது 
சிறகாய் பறக்கிறேன்..!!

உன் கண்ணுக்குழி
தீண்டிய மேகத்தால் 
கனவு படுக்கையில்
மழையாய் வீழ்கிறேன்..!!

       ~ கடலூர் ராஜ்குமார்

Saturday, 21 August 2021

நடைப்பயிற்சி ஹைக்கூ

நடைப்பயிற்சி

நேத்து சாயங்காலம்
சாப்பிட்ட பானிப்பூரியால் 
விடியற்காலையில்
பாதயாத்திரை (பரிகாரம்) நடக்கும்

நெடுந்தூரம் நடந்தாலும் 
வேர்வை வர திணறுகிறது 
அவள் புன்னகையும் வெட்கமும் 
அப்படித்தான் எப்போதும் திணறும்

பக்கத்துவீட்டு அக்கா 
பூங்கா வருவதில்லை நடைபழக
பாவம் அவளின் (பெண்) சுதந்திரம் 
மொட்டை மாடிக்குள் முடியும்

பாதை ஓரம் பூத்த பூக்கள் பேசிக்கொள்கிறது(கேள்வி)
கிருமிநாசினி பயன்படுத்தாமல் -ஏன்
நம்மை தொடுகிறார்கள் என்று

கடலூர் ராஜ்குமார்

அரிதாரம்

 போலியான புன்னகையும் இல்லை வலிக்காத  அழுகையும் இல்லை செலவு செய்யாத கோபமும் இல்லை தீண்ட தெரியாத  தாபமும் இல்லை தீர்வு தராத சோகமும் இல்லை தேவை...