Tuesday, 16 February 2021

நடைப்பிணமாக நகரும் நாட்கள்...

நடைப்பிணமாக 
நகரும் நாட்கள்...
 ☘️
நான் மழை வெள்ளத்தில் 
மூழ்கிய நெற்கதிரை போல 
சாய்ந்து கிடக்கின்றேன்
எனக்குள் நிமிர்ந்தும் எழ 
மறுக்கும் உணர்வுகள்
☘️
என் கல்லறையில் விழுந்த 
கடைசி பூக்களைப் போல 
சிதறி கிடக்கிறேன்
யாரிடமும் பேசாமல்  
காய்ந்து போன வார்த்தைகள்
☘️
பொட்டிக் கடையில் தொங்கும்
தலைப்பு செய்தியை போல
அதிகம் விவாதிக்கப்படுகிறன்
என் விரல் விரதமிருக்க
தினமும் ஏமாறும் காகிதங்கள்

கடலூர் ராஜ்குமார் 
13.02.2021

அரிதாரம்

 போலியான புன்னகையும் இல்லை வலிக்காத  அழுகையும் இல்லை செலவு செய்யாத கோபமும் இல்லை தீண்ட தெரியாத  தாபமும் இல்லை தீர்வு தராத சோகமும் இல்லை தேவை...