இளம் வெயில்
உண்ண தழுவ
காத்திருந்த
வேளையில்
அதிகாலையில்
மெல்லிய குளிர்காற்றில்
உனது சேலையில்
அசைந்து ஆடியது
கோடையின் வெக்கை
தணிக்க "மழை" யை
அனுப்பி வைத்தாய்
உனக்கும் எனக்கும்
இடைவெளியில்
வடகிழக்கு பருவமழை
கொட்டி தீர்த்து
உனது பெயரை
நினைத்துக் கொண்ட
கோடை மழையில்
நனைந்து நின்றேன்.


No comments:
Post a Comment